சித்தநெறி போதும்
போரிட்டோம் அடிமையானோம் வரலாறாய் கண்டோம்;
போதாத மனம்விரியா வாழ்வியலின் பாடம்;
யாரிடமும் சினங்கொண்டு இனிநீட்ட வேண்டாம்;
இருப்பவரில் நல்லவரின் துணைகிடைக்க உழைப்போம்;
நேரிடையாய் இனமொழிக்குள் நெருக்கத்தைப் பெருக்கி
நீக்கமற மனிதகுலம் நிலைபெற்று வாழ
போரிடாமல் வென்றெடுக்கப் புரியவைப்போம் வாரீர்!
புத்துலகை மீட்டெடுக்க சித்தநெறி போதும்.
சுமதிசுடர்

0 Comments:
Post a Comment
<< Home