Thursday, January 11, 2007

வார்ப்படம் செய்தல

I attended four days course on Casting Development in IIT, Mumbai.
Dr. Ravi guided 40 engineers on those four days.

உயர்கல்வி - வார்ப்படம் செய்தல்

"விரைவாக வார்ப்படம்செய் வழிமுறைகள்" - தலைப்பு
-விரிவுரையால் உளம்கவர்ந்தார் பேராசான் ரவியார்;
கரைகாணாக் கடலாகும் கல்வியெனக் காட்டி
-கையளவு கற்றறிய துணை நின்றார் பலர்க்கு;
வரைபடத்து மொழிமூலம் தொழில் நுட்பம் புகட்டி
-வளஞ்செழிக்க கணினிமூலம் வார்ப்படங்கள் செய்ய
உரை நிகழ்த்தி, ஊக்குவித்து, ஆய்வுகளைக் காட்டி
-உயர்வதற்கு வழிசொன்ன பெருமகனார் வாழ்க.

சுமதிசுடர்

உனக்கு உதவும் கருவி

உனக்கு உதவும் கருவி

உமைப்பற்றி ஊருலகம் அறிந்துகொள்ள வேண்டி
-ஒருசிறிய கருவியாக் எமையேற்றாய்! நன்றி!
சமையலிலே அறுஞ்சுவைக்கு பலசரக்கைச் சேர்ப்போம்.
-சற்குருவை வண்ங்கி நானும் ஆன்மீகம் பொழிவேன்.
உமையுயர்த்த இயற்கையுடன் இயங்குகின்ற கருவி.
-உட்குழப்பம் மிகுந்தாலும் ஓயாமல் ஆய்ந்தால்
அமைதிவாழ்வு கிட்டுமிது சான்றோர்தம் பாடம்
-அனுதினமும் அகச்சீர்மை செய்துவர வாழ்த்து.

சுமதிசுடர்

பராசக்தி துணை

பராசக்தி துணை

சொல்லத் துணிந்துவிட்டேன் - நின்னருளால்
-சுடர்விடப் போகின்றேன் - எனக்கு
வல்லத் துணையாக - நல்லருள்
-வாக்கினைத் தந்திடுவாய் - போரில்
கொல்லத் துணைவருவாய் - மாயையின்
-கூத்தைச் சிதைத்திடுவாய் - அகில்
எல்லாம் உனதுவசம் - சரணம்
-ஏற்றுக் கலந்து நிற்பாய்.

சுமதிசுடர்

நமது சொத்து

பாரதியாரின் பாதிப்பு.

நமது சொத்து

("செந்தமிழ் நாடெனும் போதிலே" என்ற பாரதியார் பாடலைப் போன்று பாடவும்.)

முந்தையர் தந்ததில் மூழ்கையிலே - இன்பம்
-மூப்பைத் தடுப்பதில் காணுகின்றேன் - எவர்க்கும்
சொந்தம் அதுவென கேட்கையிலே - மகிழ்வைச்
-சொல்லில் விளக்கிட கொட்டுகின்றேன். (முந்தையர் ..)

விந்தை அறிவியல் பாடமதில் - சூழ்ந்த
-விண்முதல் மண்வரை ஆய்ந்தறிந்து - மக்கள்
சிந்தை விரிந்திட ஒன்றிணைத்தார் - அதை
-செம்மை மொழிகளில் ஈந்தளித்தார். (முந்தையர் ..)

தப்பிப் பிழைக்க ஒருபாடம் - அதை
-சாதிப்போர் வன்னுடல் காண்பார் - ஞான
முப்பூ முடிக்க இரசவாதம் - உயிரில்
-மூழ்கிட குண்டலினி யோகம். (முந்தையர் ..)

சுமதிசுடர்